நண்பர்களே காதல் என்றால் என்ன ?
என்னை பொருந்தவரையில் அன்பு என்பதே காதல்.
அன்பே சிவம் என்பது போல் அன்பே காதல்
கவர்ச்சியினால் வருவது காதல் அல்ல
காம உணர்ச்சியினால் வருவதும் காதல் அல்ல
கள்ளமில்லா அன்பினால் வருவதே காதல்
காதலில் பெரும் வெற்றியை விட
காதல் கொள்வதே ஆனந்தமாகும்!!
என்னுள் அவள் இருக்கிறாள் என்ற நிம்மதியே
காதல் ஆகும்.
அவள் என்னிடம் பேசாமல் இருக்கலாம்
அவள் என்னை கண்டு ஒன்றும் தோணவில்லை என்று சொல்லலாம்
அவள் எங்கு வேண்டுமானாலும் போகலாம்
அவள் எப்படி பட்டவளாக இருந்தாலும்
அவள் மேல் உள்ள அன்பு சற்றும் குறையாது
என்ற வைராக்கியம் இருபவனின்
காதல் உண்மையானது
அவன் அன்பு உண்மையானது
இது சத்தியம் !!
Thursday, March 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment